விரைவில் அறிமுகமாகிறது ரியல்மி Neo 4 - சிறப்பம்சங்கள் இதோ!

 
realme neo 4

ரியல்மி Neo 4 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், இதன் சிறப்பம்சங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளன. 

Realme சீனாவை சேர்ந்த எலக்டரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் குறைந்த விலையில் செல்போன்களை விற்பனை செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதுவரை ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ள இந்நிறுவனம் விரைவில், ரியல்மி Neo 4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் ரியல்மி Neo 3 ஸ்மார்ட்போன் வெளியாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ரியல்மி Neo 4 ஸ்மார்ட்போனை அந்த நிறுவனம் வெளியிடவுள்ளது. வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் முதலில் அறிமுகம் செய்யப்படும் எனவும்,  அடுத்த வருட தொடக்கத்தில் இந்தியா உள்ளிட்ட உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட்போனில் 144Hz புதுப்பித்தல் திறன் கொண்ட டிஸ்ப்ளே பொறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போன், பயன்படுத்த மிகவும் ஸ்மூத்தாக இருக்கும் எனவும், கேம்ஸ்கள் விளையாட சிறந்த வகையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாக்‌ஷிப் சிப் பொறுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரி குறித்த விவரம் தெரிவிக்கப்படாவிட்டாலும், 100W பார்ஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல சிறப்பம்சங்கள்  ரியல்மி Neo 3 ஸ்மார்ட்போனில் உள்ளதை போன்றே அமையலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.