வாட்ஸ் ஆப்பில் வரவுள்ள அசத்தலான புதிய அப்டேட்ஸ் - என்ன தெரியுமா?

 
whatsapp

வாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய மாற்றங்களை செய்ய இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும்.  2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது.  இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர். உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. 

whatsapp

இந்த நிலையில் மேலும் பல மாற்றங்களைச் செய்ய இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மார்க் ஜூகர் பெர்க் கூறியுள்ளதவது: இனி வாட்ஸ் ஆப் குரூப்பில் 1024 நபர்களை இணைக்கலாம். அதேபோல் 2 ஜிபி வரை பைல்களை அனுப்ப முடியும். ஒரே நேரத்தில் 32 நபர்களை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேச முடியும்.   இதை தவிர "கம்யூனிட்டிஸ்" என்ற புதிய வசதியையும் மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ்அப்பில் குரூப் உரையாடல்களை ஒழுங்கமைக்க, பயனர்கள் பல குரூப்களை "கம்யூனிட்டிஸ்" கீழ் இணைக்க முடியும். இவை அனைத்தும் "என்ட் டு என்ட் என்க்ரிப்ஷன்" மூலம் பாதுகாக்கப்படும் என மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார். இந்தப் புதிய அப்டேட் உலகளவில் விரைவில் வெளியிடப்பட்டு, அடுத்த சில மாதங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது