4,230 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

4,230 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

டெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஓப்போ நிறுவனத்தின் ஸ்பின்-ஆப் ரியல்மி பிராண்டு லைன்அப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லியில் இந்த அறிமுக விழா நடைபெற்றது. பலர் யூடியூப் வாயிலாக நேரலையில் பார்த்து ரசித்தனர். ரியல்மி 2 ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளும்போது இந்த ஸ்மார்ட்போனில் செல்பி கேமரா மற்றும் 3D கிரேடியன்ட் யுனிபாடி டிசைன் ஆகியவை அப்கிரேடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று விழாவில் அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் வெர்ஷன் விலை ரூ.8,999 என்றும், 4 ஜிபி ரேம் வெர்ஷன் விலை ரூ.10,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டைனமிக் பிளாக், ரேடியன்ட் ப்ளூ, பிளாக் ஆகிய நிறங்களில் வெளியாக உள்ளது. இதன் விற்பனை மார்ச் 12-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.

ரியல்மி 3 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.2 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ், டுயல் சிம் நானோ, மீடியாடெக் ஹீலியோ பி70 பிராஸசர், 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம், 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி, 13 + 2 எம்.பி ரியர் கேமரா, எல்.இ.டி ஃபிளாஷ், 13 எம்.பி செல்பி கேமரா, ஃபேஸ் அன்லாக், ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி, வைஃபை, விரல்ரேகை சென்சார், 4230 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளது.