ஹைய்யா! இனி பார்க்கும் சேனல்களுக்கு மட்டுமே கட்டணம் கட்டலாம் : டிராய் அதிரடி 

 

ஹைய்யா! இனி பார்க்கும் சேனல்களுக்கு மட்டுமே கட்டணம் கட்டலாம் : டிராய் அதிரடி 

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (TRAI) புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் டிடிஎச் சேவையில் தாங்கள் பார்க்கும் சேனல்களுக்கு ஏற்ப மட்டும் பணம் செலுத்தினால் போதுமானது என்று (TRAI ) அறிவித்துள்ளது .மேலும் இந்த விதிமுறை டிசம்பர் 29 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் அதில் குறிப்பிடபட்டுள்ளது .

புது டெல்லி :

புது டெல்லியில் அமைந்துள்ள இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான புதிய விதிமுறைகளை நேற்று வெளியிட்டது. 

இந்த புதிய விதிமுறையால் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தேவையான சேனல்களுக்கு மட்டும் மாதாந்திர வாடகை செலுத்தினால் போதும் என்று தெரிவித்துள்ளது . ஆனால் இதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் பேக்கேஜ் என்கின்ற பெயரில் ஒரு தொகுப்பான கட்டணத்தை டிடிஎச் சேவைக்குச் செலுத்தி வந்திருந்தார்கள். 

TRAI

அந்த பேக்கேஜ் சேனல்கள் லிஸ்டில் வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு தரக்கூடிய பல்வேறு முரண்பாடுகள் அந்த சேனல்கள் தொகுப்பில் இருந்து வந்தது எடுத்துகாட்டாக நமக்கு விருப்பம் இல்லாத சேனல்களுக்கும்  சேர்த்து வாடிக்கையாளர்கள்  கட்டணம் செலுத்தி வந்திருந்தார்கள் .

ஆனால் டிராய் வெளியிட்டுள்ள புதிய விதிமுறையின் படி நமக்கு தேவையான சேனல்களுக்கு மட்டும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தினால் போதும்  மேலும் இதற்காக ஒளிபரப்பாளர்கள் ஒவ்வொரு சேனலின் தனிப்பட்ட மாதாந்திர வாடகை விவரத்தையும், ஒட்டுமொத்த மாதாந்திர விவரத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று டிராய் வெளியிட்ட புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய விதிமுறைகளால் வாடிக்கையாளர்கள் தற்போது பார்த்து வரும் சேனல் சேவையில் எந்தவிதத்திலும் இடையூறுகளைச் சந்திக்கமாட்டார்கள் என்று டிராய் விதிமுறையில் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

TRAI

இதுகுறித்து டிராய் வெளியிட்ட செய்தி குறிப்பில் :

டிசம்பர் 29 ஆம் தேதிக்குப் பின் டிராயின் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதால் ஏற்கெனவே மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பல்வேறு சேனல்கள் சேவை நிருத்தப்படாது என்றும் டிராய் மூலம்

வாடிக்கையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் சேனல்களில் எதையுமே 29 ஆம் தேதிக்குப் பின்பு துண்டிக்கக் கூடாது என்று அனைத்து ஒளிபரப்பு சேவைதாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் டிராய் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சேவையைக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என்றும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வராது என்றும் தெளிவாக தெரிவிக்கபட்டுள்ளது. 

TRAI

மேலும் 100 சேனல்களுக்கு அதிகபட்சமாக ரூ.130 வரை கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கலாம் என்றும் இதில் ப்ரீ ஏர் சேனல் மற்றும் கட்டணம் செலுத்தி பார்க்கும் சேனல் அல்லது இரண்டும் சேர்த்ததாகக் கூட இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு டிராய் வெளியிட்டுள்ளஅந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.