டெக் மகிந்திரா லாபம் ரூ.1,081 கோடி.. இடைக்கால, சிறப்பு டிவிடெண்டாக ரூ.15 அறிவிப்பு..

டெக் மகிந்திரா லாபம் ரூ.1,081 கோடி.. இடைக்கால, சிறப்பு டிவிடெண்டாக ரூ.15 அறிவிப்பு..

டெக் மகிந்திரா நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.1,081.4 கோடி ஈட்டியுள்ளது.
சாப்ட்வேர் சேவைகள் நிறுவனமான டெக் மகிந்திரா கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. டெக் மகிந்திரா நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.1,081.4 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 17.4 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் டெக் மகிந்திரா நிறுவனம் லாபமாக ரூ.1,309.8 கோடி ஈட்டியிருந்தது.

டெக் மகிந்திரா லாபம் ரூ.1,081 கோடி.. இடைக்கால, சிறப்பு டிவிடெண்டாக ரூ.15 அறிவிப்பு..
டெக் மகிந்திரா

2021 மார்ச் காலாண்டில் டெக் மகிந்திரா நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாயாக ரூ.9,729.9 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 0.9 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் டெக் மகிந்திரா நிறுவனத்தின் வருவாய் ரூ.9,647.1 கோடியாக இருந்தது. 2021 மார்ச் காலாண்டில் டாலர் அடிப்படையில் மகிந்திரா நிறுவனத்தின் வருவாய் 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

டெக் மகிந்திரா லாபம் ரூ.1,081 கோடி.. இடைக்கால, சிறப்பு டிவிடெண்டாக ரூ.15 அறிவிப்பு..
டெக் மகிந்திரா

2021 மார்ச் காலாண்டில் டெக் மகிந்திரா நிறுவனத்தின் பணிபுரியும் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 1.21 லட்சமாக குறைந்துள்ளது. டெக் மகிந்திரா நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு இடைக்கால மற்றும் சிறப்பு டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.15 வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது 2021 ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.