3 மாதத்தில் ரூ.1,309.8 கோடி லாபம் ஈட்டிய டெக் மகிந்திரா…

 

3 மாதத்தில் ரூ.1,309.8 கோடி லாபம் ஈட்டிய டெக் மகிந்திரா…

டெக் மகிந்திரா நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் லாபமாக ரூ.1,309.8 கோடி ஈட்டியுள்ளது.

பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் நாட்டின் 5வது மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான டெக் மகிந்திரா தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. டெக் மகிந்திரா நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் லாபமாக ரூ.1,309.8 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 23 சதவீதம் அதிகமாகும்.

3 மாதத்தில் ரூ.1,309.8 கோடி லாபம் ஈட்டிய டெக் மகிந்திரா…
டெக் மகிந்திரா

டெக் மகிந்திரா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.9,647.1 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 2.9 சதவீதம் அதிகமாகும். டாலர் அடிப்படையில் அந்நிறுவனத்தின் வருவாய் 130.87 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது 2020 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 3.4 சதவீதம் அதிகமாகும்.

3 மாதத்தில் ரூ.1,309.8 கோடி லாபம் ஈட்டிய டெக் மகிந்திரா…
டெக் மகிந்திரா

கடந்த டிசம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி டெக் மகிந்திரா நிறுவனத்தின் பணிபுரியும் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,21,901 ஆக உள்ளது. 2020 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் டிசம்பர் காலாண்டில் பணியாளர்களின் எண்ணிக்கை 2,357 குறைந்துள்ளது என்று டெக் மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.