டெக் மகிந்திரா லாபம் ரூ.1,353 கோடி.. வருவாய் 5 சதவீதம் வளர்ச்சி

 

டெக் மகிந்திரா லாபம் ரூ.1,353 கோடி.. வருவாய் 5 சதவீதம் வளர்ச்சி

டெக் மகிந்திரா நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,353.2 கோடி ஈட்டியுள்ளது.

சாப்ட்வேர் சேவைகள் வழங்கும் நிறுவனமான டெக் மகிந்திரா கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. டெக் மகிந்திரா நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,353.2 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 30.8 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் டெக் மகிந்திரா நிறுவனம் லாபமாக ரூ.1,081.4 கோடி ஈட்டியிருந்தது.

டெக் மகிந்திரா லாபம் ரூ.1,353 கோடி.. வருவாய் 5 சதவீதம் வளர்ச்சி
டெக் மகிந்திரா

2021 ஜூன் காலாண்டில் ரூபாய் மதிப்பு அடிப்படையில் டெக் மகிந்திரா நிறுவனம் வருவாயாக ரூ.10,197.6 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 4.8 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் டெக் மகிந்திரா நிறுவனத்தின் வருவாய் ரூ.9,729.9 கோடியாக இருந்தது. 2021 ஜூன் காலாண்டில் டாலர் அடிப்படையில் மகிந்திரா நிறுவனத்தின் வருவாய் 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

டெக் மகிந்திரா லாபம் ரூ.1,353 கோடி.. வருவாய் 5 சதவீதம் வளர்ச்சி
டெக் மகிந்திரா

கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது டெக் மகிந்திரா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 7.24 சதவீதம் உயர்ந்து ரூ.1,209.45ஆக இருந்தது.