ரூ.1,065 கோடி லாபம் ஈட்டிய டெக் மகிந்திரா.. பங்குதாரர்களுக்கு சிறப்பு டிவிடெண்ட் அறிவிப்பு

 

ரூ.1,065 கோடி லாபம் ஈட்டிய டெக் மகிந்திரா.. பங்குதாரர்களுக்கு சிறப்பு டிவிடெண்ட் அறிவிப்பு

டெக் மகிந்திரா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் லாபமாக ரூ.1,064.60 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி ஐ.டி. சேவைகள் நிறுவனங்களில் ஒன்றான டெக் மகிந்திரா கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. டெக் மகிந்திரா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் லாபமாக ரூ.1,064.60 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 9.5 சதவீதம் அதிகமாகும்.

ரூ.1,065 கோடி லாபம் ஈட்டிய டெக் மகிந்திரா.. பங்குதாரர்களுக்கு சிறப்பு டிவிடெண்ட் அறிவிப்பு
டெக் மகிந்திரா

2020 செப்டம்பர் காலாண்டில் டெக் மகிந்திரா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.9,371.8 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 2.9 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் டெக் மகிந்திரா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.9,106.3 கோடி ஈட்டியிருந்தது.

ரூ.1,065 கோடி லாபம் ஈட்டிய டெக் மகிந்திரா.. பங்குதாரர்களுக்கு சிறப்பு டிவிடெண்ட் அறிவிப்பு
டெக் மகிந்திரா

டெக் மகிந்திரா நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.15 சிறப்பு டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் டெக் மகிந்திரா நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 842 அதிகரித்து 1.24 லட்சமாக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று டெக் மகிந்திரா பங்கின் விலை ரூ.10 அதிகரித்து ரூ.848.10ஆக உயர்ந்தது.