‘இந்தி தெரியவில்லை என்று கிண்டல் செய்தார்கள்’: யுவன் ஷங்கர் ராஜாவின் கசப்பான அனுபவம்!

‘இந்தி தெரியவில்லை என்று கிண்டல் செய்தார்கள்’: யுவன் ஷங்கர் ராஜாவின் கசப்பான அனுபவம்!

சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இந்தி திணிப்புக்கு எதிராக அணிந்திருந்த டிஷர்ட் வைரலானது. இதை தொடர்ந்து பலரும் இந்தி தெரியாது போடா, ‘I am a tamil speaking Indian என்று அச்சிட்ட டிஷர்ட்களை போட்டு ட்ரெண்டாக்கினர். அவ்வளவு ஏன் இதற்கு பாஜக நிர்வாகிகள் வரை எதிர்வினையாற்றினர்.

‘இந்தி தெரியவில்லை என்று கிண்டல் செய்தார்கள்’: யுவன் ஷங்கர் ராஜாவின் கசப்பான அனுபவம்!

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து பதிலளித்துள்ளார். அதில், நான் இந்த விஷயம் இவ்வளவு வைரலாகும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அதில் இருந்த ‘I am a tamil speaking Indian’ என்ற வார்த்தைகள் உண்மைதானே? அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. அது என்னுடைய கருத்து. எனக்கு அப்படி ஒரு கசப்பான சம்பவம் விமான நிலையத்தில் நடந்துள்ளது. எண்னிடம் விமான நிலையத்தில் அதிகாரிகள் இந்தியில் பேசினேன். நான் புரியவில்லை என்றேன். அதற்கு என்னை கிண்டல் செய்து சிரித்தார்கள்.

‘இந்தி தெரியவில்லை என்று கிண்டல் செய்தார்கள்’: யுவன் ஷங்கர் ராஜாவின் கசப்பான அனுபவம்!

நாம் விமான நிலையத்திற்கு வரும் அனைவரும் தமிழ் பேச வேண்டும் என்று கூறினால் சரியாக இருக்குமா? நான் இந்தியை எதிர்க்கவில்லை. நான் இந்தி படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இந்தி பாடல்களை பாடியிருக்கிறேன். அந்த மொழி மீது எந்த வெறுப்பும் இல்லை. அதை திணிக்காதீர்கள் என்று தான் கூறுகிறேன். நான் அந்த டிஷர்ட்டை பார்க்கும் போது எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் தான் நினைவுக்கு வந்தது. அதனால் தான் அணிந்தேன். மற்றப்படி அரசியல் நோக்கம் ஏதுமில்லை’ என்று கூறியுள்ளார்.