ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதி கேட்டு வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் – கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீச்சு

 

ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதி கேட்டு வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் – கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீச்சு

வாஷிங்டன்: ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதி கேட்டு கறுப்பினத்தவர்கள் வெள்ளை மாளிகை அருகே மீண்டும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் மீது வெள்ளை இன போலீசார் தாக்குதல் நடத்துவது வாடிக்கையான விஷயமாகும். அந்த வகையில் சமீபத்தில் மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ் நகரத்தில் போலீஸ் காவலில் இருந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பர் இனத்தை சேர்ந்த நபர் கொல்லப்பட்ட விவகாரம் உலகளவில் எதிர்ப்பலைகளை உருவாக்கி உள்ளது.

அவரது மரணத்துக்கு நீதி கேட்டு மின்னசோட்டா, நியூயார்க், அட்லாண்டா போன்ற பல பகுதிகளிலும் கறுப்பின மக்கள் ஒன்றுகூடி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் வெடித்து வருகிறது. இதன் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா மற்றும் அட்லாண்டா உட்பட 25 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதி கேட்டு வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் – கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீச்சு

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகேயுள்ள பூங்காவில் நேற்று மீண்டும் வன்முறை மோதல்கள் வெடித்தன. இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனிடையே கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். மேலும் பெப்பர் ஸ்ப்ரே மற்றும் புகைக் குண்டுகளை வீசினர்.