சென்னை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு! – தமிழக அரசு முடிவு

 

சென்னை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு! – தமிழக அரசு முடிவு

சென்னை பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தர் இல்லாத நிலையில், பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு தமிழ் தெரியாத, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை துணை வேந்தர்களாக நியமிக்கும் போக்கு புதிதாக தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழகம் தொடங்கி பல பல்கலைக் கழகங்களுக்கு வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டனர்.

சென்னை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு! – தமிழக அரசு முடிவு
இந்த நிலையில் இந்தியாவின் பழமையான பல்கலைக் கழகங்களுள் ஒன்றான சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் துரைசாமியின் பதவிக்காலம் வருகிற செவ்வாய்க் கிழமையோடு முடிவடைய உள்ளது. சென்னை பல்கலைக் கழகத்துக்கு புதிதாக துணை வேந்தர் இதுவரை நியமிக்கப்படாமல் உள்ளது.
இதனால், வழக்கத்துக்கு மாறாக, பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி அபூர்வா தலைமையில் நான்கு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தொழில்நுட்ப கல்வி ஆணையர் விவேகானந்தன், எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், சென்னை பல்கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலைவர் சுந்தரம் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.