ஆஸி.,யை வீழ்த்திய உத்வேகத்தோடு நியூசிலாந்து புறப்படும் டீம் இந்தியா! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainஆஸி.,யை வீழ்த்திய உத்வேகத்தோடு நியூசிலாந்து புறப்படும் டீம் இந்தியா!

team india / top tamil news
team india / top tamil news

மும்பை: ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய கையோடு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு புறப்படுகிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி அபாரமாக வென்றது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அட்டகாசமாக இந்திய அணியை வென்றது. ஆனால் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட இந்திய அணி அடுத்தடுத்து இரு போட்டிகளிலும் வென்று கோப்பையை தட்டிச் சென்றது. அதன்படி இரண்டாவது ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்திலும், நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் ஆஸி.,யை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்தது.

team india / top tamil news

இந்நிலையில், வெற்றி பெற்ற கையோடு நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய கிரிக்கெட் அணி புறப்படுகிறது. அந்நாட்டில் ஐந்து டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்தை எதிர்த்து இந்திய அணி விளையாட இருக்கிறது. அதற்காக இன்று பெங்களூருவில் இருந்து நியூசிலாந்துக்கு இந்திய அணி புறப்படுகிறது. சிங்கப்பூர் மார்க்கமாக நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். இவ்விரு அணிகளுக்கிடையே முதல் டி20 போட்டி வருகிற 24-ந்தேதி அங்கு நடைபெறவுள்ளது.

team india / top tamil news

நியூசிலாந்து சுற்றுப் பயணத்துக்கான டி20 போட்டி அணி மட்டுமே இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணி விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணி விவரம்:-

விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா, தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஜடேஜா, மணிஷ் பாண்டே, பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ், முகமது ‌ஷமி, ‌ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர்.

2018 TopTamilNews. All rights reserved.