ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

 

ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

கொரோனா பரவலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கல்வி தொலைக்காட்சி மற்றும் இணைய தளத்தின் வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தவிர மற்ற வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எக்காரணத்தைக் கொண்டும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாது என திட்டவட்டமாக தெரிவித்த அரசு, நோய்ப் பரவல் கட்டுக்குள் வந்த பிறகு தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளது.

ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே தேர்வுக்கு தயாராக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அண்மையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மட்டும் முதன்மை கல்வி அதிகாரியிடம் தகவல் தெரிவித்துவிட்டு பணியில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மே 1ஆம் தேதி முதல் அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லையென பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கும் வரை ஆசிரியர்கள் வீட்டில் இருந்த படி வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றும் மற்ற வகுப்பு மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.