சேலத்தில் பள்ளிக்கு சென்ற ஆசிரியருக்கு கொரோனா!

 

சேலத்தில் பள்ளிக்கு சென்ற ஆசிரியருக்கு கொரோனா!

சேலம் மாவட்டம் கோட்டை அரசினர் மகளிர் பள்ளியில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் ஒருவருக்கு கொரனோ தோற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 10 நாட்களுக்கு முன்பு கடந்த 16-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. திறக்கப்பட்ட சில நாட்களிலேயே சேலம் வாழப்பாடி அருகே உள்ள பள்ளியில் படித்துவரும் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து பள்ளியிலும், மாணவி இருந்த விடுதியிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

சேலத்தில் பள்ளிக்கு சென்ற ஆசிரியருக்கு கொரோனா!

இந்நிலையில் கோட்டை அரசினர் மகளிர் பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு பாடம் பயிற்றுவித்துவரும் ஆசிரியருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனடைத்து அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.