• December
    06
    Friday

Main Area

Main



செருப்பு காலால் மாணவியின் முகத்தில் எட்டி உதைத்த தலைமை ஆசிரியர்!

Student
Student

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே 5 ஆம் வகுப்பு மாணவியை தலைமையாசிரியர் எட்டி உதைத்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவையாறு அடுத்த மேலதிருப்பந்துருத்தி  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சுந்தரி, 5 ஆம் வகுப்பு மாணவி அஜிஜாவை செருப்பு காலால் முகத்தில் உதைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவையாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்  உதவி ஆணையரிடம் மாணவ, மாணவிகள் அவர்களது  பெற்றோரிடம் வந்து முற்றுகையிட்டு மனுகொடுத்தனர்.  அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. 

படிக்காத மாணவர்களை கண்டிக்கிறேன் என்ற பெயரில் ஆசிரியர் செய்யும் சித்ரவதைகளால் மாணவர்கள் உடல் அளவில் மட்டுமல்ல மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஆசிரியர்கள் உணரவேண்டும்.  இத்தகைய ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் சொல்லும் ஒரே பதில் என் பிள்ளை படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.... ஆனால் உயிருடன் வேண்டும் என்பதுதான்.!
 

2018 TopTamilNews. All rights reserved.