ஆசிரியர் தகுதித் தேர்வு மீண்டும் எழுதியாக வேண்டும்! – செங்கோட்டையன் அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு மீண்டும் எழுதியாக வேண்டும்! – செங்கோட்டையன் அறிவிப்பு

2013 டெட் ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மீண்டும் தற்போது தேர்வு எழுத வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
அரசு அல்லது தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருபவர்கள் டெட் (டி.இ.டி) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வு மீண்டும் எழுதியாக வேண்டும்! – செங்கோட்டையன் அறிவிப்பு

அதுவும் ஒரு முறை தேர்ச்சி பெற்றால் அது ஏழு ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. கடந்த 2013ல் டெட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற பல ஆசிரியர்களுக்கு இன்னும் அரசுப் பணிகள் வழங்கப்படவில்லை. இதனால், டெட் தேர்வில் பெற்ற வெற்றியை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வு மீண்டும் எழுதியாக வேண்டும்! – செங்கோட்டையன் அறிவிப்பு

பல அரசியல் கட்சித் தலைவர்கள், ஆசிரியர் சங்கங்கள் டெட் தேர்வு வெற்றியை நிரந்தரமானதாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு மீண்டும் எழுதியாக வேண்டும்! – செங்கோட்டையன் அறிவிப்பு

இந்த நிலையில், “டெட் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்து ஏழு ஆண்டை நிறைவு செய்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது. 2013ம் ஆண்டுக்கு முன் டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால், 2013ல் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.