மத்தியப் பிரதேசத்தில் டீ விற்பவரின் மகள் ஃபைட்டர் பைலட் ஆனார்

 

மத்தியப் பிரதேசத்தில் டீ விற்பவரின் மகள் ஃபைட்டர் பைலட் ஆனார்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் நீமச் மாவட்டத்தை சேர்ந்த டீ விற்பவரின் மகள் இந்திய விமான படையில் ஃபைட்டர் பைலட் ஆகியுள்ளார்.

ஒருவருக்கு நெஞ்சில் உறுதி இருந்தால் தடைகள் ஒருபோதும் அவரது கனவுகளை நனவாக்குவதை தடுக்க முடியாது. அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் நீமச் மாவட்டத்தை சேர்ந்த டீ விற்பவரின் 24 வயது மகள் அஞ்சல் கங்வால் என்பவரால் இது நிரூபணம் ஆகியுள்ளது. ஏனெனில் அவர் தற்போது இந்திய விமான படையில் ஃபைட்டர் பைலட்டாக தகுதி பெற்றுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் டீ விற்பவரின் மகள் ஃபைட்டர் பைலட் ஆனார்

சில நாட்களுக்கு முன்பு அவர் இந்திய விமானப்படைக்கு (ஐ.ஏ.எஃப்) நியமிக்கப்பட்டார். ஆனால் அஞ்சல் கங்வாலுக்கு இது சுலபமான பயணமாக அமையவில்லை. ஏனெனில் சில சமயங்களில் அவரது தந்தையிடம் கல்வி கட்டணத்தை செலுத்த பணம் கூட இல்லாத சூழல் நிலவியது. அஞ்சல் கங்வாலின் தந்தை மாநிலம் நீமச் மாவட்டத்தில் ஒரு பேருந்து நிலையத்தில் டீ விற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.