டிசம்பர் காலாண்டில் மட்டும் டி.சி.எஸ். லாபம் ரூ.8,701 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.6 டிவிடெண்டு

டிசம்பர் காலாண்டில் மட்டும் டி.சி.எஸ். லாபம் ரூ.8,701 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.6 டிவிடெண்டு

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.8,701 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பர் காலாண்டில் அதிக அளவாக கடந்த காலாண்டில் லாபம் ஈட்டியுள்ளது. 2020 டிசம்பர் காலாண்டில் டி.சி.எஸ். நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.8,701 கோடி ஈட்டியுள்ளது.

டிசம்பர் காலாண்டில் மட்டும் டி.சி.எஸ். லாபம் ரூ.8,701 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.6 டிவிடெண்டு
டி.சி.எஸ்.

டி.சி.எஸ். நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு லாபம் முந்தைய செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 7.2 சதவீதம் அதிகமாகும். டி.சி.எஸ். நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.42,015 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 5.4 சதவீதம் அதிகமாகும். அதேசமயம் முந்தைய செப்டம்பர் மாத வருவாயுடன் ஒப்பிட்டால் 4.7 சதவீதம் மட்டுமே உயர்வாகும்.

டிசம்பர் காலாண்டில் மட்டும் டி.சி.எஸ். லாபம் ரூ.8,701 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.6 டிவிடெண்டு
டி.சி.எஸ்.

டி.சி.எஸ். நிறுவனம் பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது. அந்நிறுவனம் 3வது இடைக்கால டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.6 அறிவித்துள்ளது. 2021 பிப்ரவரி 3ம் தேதியன்று பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்டுக்கான பணம் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் டி.சி.எஸ். பங்கு விலை 32.4 சதவீதம் அதிகரித்துள்ளது.