முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த டி.சி.எஸ்…. நிகர லாபம் ரூ.7,475 கோடியாக குறைந்தது…

முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த டி.சி.எஸ்…. நிகர லாபம் ரூ.7,475 கோடியாக குறைந்தது…

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) கடந்த செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.7,475 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டி.சி.எஸ். கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. டி.சி.எஸ். நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.7,475 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 7 சதவீதம் குறைவாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் டி.சி.எஸ். நிறுவனம் நிகர லாபமாக ரூ.8,042 கோடி ஈட்டியிருந்தது.

முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த டி.சி.எஸ்…. நிகர லாபம் ரூ.7,475 கோடியாக குறைந்தது…
டி.சி.எஸ்.

2020 செப்டம்பர் காலாண்டில் டி.சி.எஸ். நிறுவனத்தின் வருவாய் ரூ.40,135 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் டி.சி.எஸ். நிறுவனத்தின் வருவாய் ரூ.38,977 கோடியாக இருந்தது. இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.12 வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த டி.சி.எஸ்…. நிகர லாபம் ரூ.7,475 கோடியாக குறைந்தது…
டி.சி.எஸ்.

டி.சி.எஸ். நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 5.33 கோடி பங்குகளை திரும்ப வாங்க சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் இந்நிறுவனம் 2018ல் பங்குகளை திரும்ப வாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு இருந்தது. நேற்று மும்பை பங்குச் சந்தையில் டி.சி.எஸ். நிறுவன பங்கின் விலை 0.78 சதவீதம் அதிகரித்து ரூ.2,737.40ஆக உயர்ந்தது.