ஃபார் ஃபீல்ட் குரல் அங்கீகார அம்சம் கொண்ட டி.சி.எல் 4K ஆண்ட்ராய்டு டிவி இந்தியாவில் அறிமுகம்

 

ஃபார் ஃபீல்ட் குரல் அங்கீகார அம்சம் கொண்ட டி.சி.எல் 4K ஆண்ட்ராய்டு டிவி இந்தியாவில் அறிமுகம்

டெல்லி: ஃபார் ஃபீல்ட் குரல் அங்கீகார அம்சம் கொண்ட டி.சி.எல் 4K ஆண்ட்ராய்டு டிவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஃபார் ஃபீல்ட் குரல் அங்கீகார அம்சம் கொண்ட டி.சி.எல் 4K ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது டி.சி.எல் பி715 மிட்-ரேஞ்ச் டெலிவிஷன் சீரீஸ் ஆகும். ஆண்ட்ராய்டு டிவி மென்பொருள் மற்றும் 4K ரெசல்யூஷன் திரை போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு மாடலின் விலை ரூ.39,990 எனவும், மற்றொன்றின் விலை ரூ.99,990 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 43 இன்ச் திரை அளவுகளில் இருந்து சாதனத்தின் திரை அளவு அம்சங்கள் தொடங்குகின்றன.

செயற்கை நுண்ணறிவு மற்றும் ஃபார் ஃபீல்ட் குரல் அங்கீகார அம்சம் ஆகிய அம்சங்கள் இந்த டிவி மாடல்களில் பிரதான அம்சமாக இடம்பெற்றுள்ளன. டிவியில் உள்ள நான்கு மைக்குகள் அறையில் உள்ள ஒலிகளை நன்கு உள்வாங்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. அதாவது கூகுள் அசிஸ்டென்ட் போன்ற அம்சமாக இது செயல்படுகிறது. ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இந்த சீரீஸ் டிவிக்களில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் டால்பி விஷன் ஹெச்.டி.ஆர் ஃபார்மட் இடம்பெற்றுள்ளது.