மூத்த வயதினருக்கான ஸ்மார்ட் வாட்ச்- டிசிஎல் அறிமுகம்

 

மூத்த வயதினருக்கான ஸ்மார்ட் வாட்ச்- டிசிஎல் அறிமுகம்

மூத்த வயதினருக்கான ஸ்மார்ட் வாட்ச்சை டிசிஎல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் தொடங்கி உள்ள ஐஃஎப்ஏ டெக் கண்காட்சியில் இந்த ஸ்மார்ட் வாட்சை டிசிஎல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மூவ்டைம் ஃபேமிலி வாட்ஸ் எம்டி43ஏ என பெயரிடப்பட்டுள்ள இந்த வாட்சில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. புளூடூத் மூலம் அழைப்பு மேற்கொள்ளும் வசதி, இதய துடிப்பு கண்காணிப்பு வசதி, மருந்து சாப்பிட நினைவுப்படுத்தும் வசதி,

மூத்த வயதினருக்கான ஸ்மார்ட் வாட்ச்- டிசிஎல் அறிமுகம்

அணிபவர் கீழே விழும்போது, 60 விநாடிகளுக்குள் அவசர கால தொடர்புக்குரிய எண்களுக்கு அலெர்ட் அனுப்பும் வசதி ஆகியவை உள்ளன. குறிப்பாக இந்த அலெர்ட், வாட்ச் அணிந்திருக்கும் நபர் எந்த இடத்தில் விழுந்து கிடக்கிறார் என்பதை லொகேஷடனும் துல்லியமான அலெர்ட் மெசேஜாக தாமாகவே அனுப்பிவிடுமாம்.

மூத்த வயதினருக்கான ஸ்மார்ட் வாட்ச்- டிசிஎல் அறிமுகம்

மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவே வாய்ஸ் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ்கள் அனுப்பிக்கொள்ளலாம். என்பதோடு, அன்றாட உடல் அசைவுகள், மற்றும் தூங்கும் நேரத்தின் அளவு ஆகியவற்றை கண்காணிக்கும் வசதியும் உள்ளது. மேலும், இதில் எஸ்ஒஎஸ் எனப்படும் அவசர கால உதவிக்கான தனி பட்டனும் உள்ளது.

மூத்த வயதினருக்கான ஸ்மார்ட் வாட்ச்- டிசிஎல் அறிமுகம்

வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ட் கொண்ட இந்த வாட்சில் சிம்கார்டு – வைஃபை வசதியும் உண்டு. சார்ஜ் செய்தால் 2 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என கூறும் டிசிஎல் நிறுவனம், இதை இந்திய மதிப்பில் 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இது இந்தியாவில் எப்போது விற்பனைக்கு கிடைக்கும் என தகவல் வெளியாகவில்லை.

எஸ். முத்துக்குமார்