டாடா ஊழியர்களின் குடும்பத்தாருக்கு சலுகைகள்… ரத்தன் டாடாவுக்கு குவியும் பாராட்டுகள்!

டாடா ஊழியர்களின் குடும்பத்தாருக்கு சலுகைகள்… ரத்தன் டாடாவுக்கு குவியும் பாராட்டுகள்!

கொரோனா இரண்டாம் அலை பரவல் இந்தியாவை சூறையாடியிருக்கிறது. ஏராளமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். குடும்பத் தலைவன்களை இழந்து நிர்கதியாய் நிற்கின்றன பல குடும்பம்கள். இன்னும் கொடூரமாய் தாய், தந்தை என இருவரையும் கொரோனாவுக்குப் பலி கொடுத்துவிட்டு அனாதையாக கேட்பாரற்று நிற்கின்றன். அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களின் நலனைப் பாதுகாக்க அந்தந்த மாநில அரசுகள் சில நலத்திட்ட உதவிகளை அறிவித்துள்ளன.

டாடா ஊழியர்களின் குடும்பத்தாருக்கு சலுகைகள்… ரத்தன் டாடாவுக்கு குவியும் பாராட்டுகள்!

இச்சூழலில் தனியார் நிறுவனமான டாடா ஸ்டீல், தங்களது ஊழியர்களின் சமூக பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அதன்படி டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் கொரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால், அந்தக் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் பட்டப்படிப்பை முடிக்கும் வரையிலான கல்விச்செலவை தாங்கள் ஏற்பதாகக் கூறியுள்ளது.

டாடா ஊழியர்களின் குடும்பத்தாருக்கு சலுகைகள்… ரத்தன் டாடாவுக்கு குவியும் பாராட்டுகள்!

அதேபோல கொரோனாவில் உயிரிழந்த ஊழியருக்கு 60 வயது நிறைவடையும் வரை அவர் கடைசியாகப் பெற்ற ஊதியம் ஒவ்வொரு மாதமும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தாருக்கு மருத்துவ வசதியும், வீட்டு வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அனைவரது மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது. இதைப் போல மற்ற நிறுவனங்களும் அறிவிக்க ஒரு வினையூக்கியாக டாடா செயல்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.