3 மாசத்துல ரூ.4,648 கோடி நஷ்டம்…. டாடா ஸ்டீல்

 

3 மாசத்துல ரூ.4,648 கோடி நஷ்டம்…. டாடா ஸ்டீல்

நாட்டின் முன்னணி ஸ்டீல உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.4,648.13 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் நிகர லாபமாக ரூ.714.03 கோடி ஈட்டியிருந்தது.

3 மாசத்துல ரூ.4,648 கோடி நஷ்டம்…. டாடா ஸ்டீல்

2020 ஜூன் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.24,288.51 கோடியாக குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனத்தின் செயலா்பாட்டு வாயிலான வருவாய் ரூ.35,947.11 கோடியாக இருந்தது. டாடா ஸ்டீல் நிறுவனத்தின் கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகள் குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனருமான டி.வி. நரேந்திரன் கூறியதாவது:

3 மாசத்துல ரூ.4,648 கோடி நஷ்டம்…. டாடா ஸ்டீல்

கோவிட்-19ன் தாக்கத்தை குறைப்பதில் நாங்கள் வெற்றிகரமாக செயல்பட்டோம். ஏனெனில், நாங்கள் வணிகத்தை ஏற்றுமதி சந்தைகளை நோக்கி நகர்த்தினோம். மற்றும் மோசமான சந்தை நிலைமைகளை மீறி தாராள பணப்புழக்கங்களை வெற்றிகரமாக உருவாக்கினோம். மோசமானது நமக்கு பின்னால் இருக்கிறது என்ற எச்சரிக்கையுடன் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.