டாடா ஸ்டீல் லாபம் ரூ.6,644 கோடி… பங்கு ஒன்றுக்கு ரூ.25 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

டாடா ஸ்டீல் லாபம் ரூ.6,644 கோடி… பங்கு ஒன்றுக்கு ரூ.25 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

2021 மார்ச் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.6,644.1 கோடி ஈட்டியுள்ளது.

டாடா ஸ்டீல் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.6,644.1 கோடி ஈட்டியுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் ரூ.1,481.3 கோடியை இழப்பாக சந்தித்து இருந்தது. டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.25 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது.

டாடா ஸ்டீல் லாபம் ரூ.6,644 கோடி… பங்கு ஒன்றுக்கு ரூ.25 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை
டாடா ஸ்டீல் ஆலை

2021 மார்ச் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் செயல்பாட்டு ஒட்டு மொத்த வருவாய் ரூ.49,977.4 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 38.8 சதவீதம் அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் ரூ.36,009.4 கோடியை செயல்பாட்டு வாயிலான ஒட்டு மொத்த வருவாயாக ஈட்டியிருந்தது.

டாடா ஸ்டீல் லாபம் ரூ.6,644 கோடி… பங்கு ஒன்றுக்கு ரூ.25 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை
ஸ்டீல்

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஒட்டு மொத்த கச்சா உருக்கு உற்பத்தி கடந்த மார்ச் காலாண்டில் 1.5 சதவீதம் அதிகரித்து 80.2 லட்சம் டன்னாகவும், ஸ்டீல் டெலிவிரி (விற்பனை) 10.9 சதவீதம் அதிகரித்து 78.3 லட்சம் டன்னாகவும் உயர்ந்தள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர கடன் ரூ.75,389 கோடியிலிருந்து ரூ.29,390 கோடியாக குறைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று டாடா ஸ்டீல் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.19 சதவீதம் உயர்ந்து ரூ.1,103.00ஆக அதிகரித்தது.