வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சு…. டாடா ஸ்டீல்

 

வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சு…. டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் லாபமாக ரூ.1,635 கோடி ஈட்டியுள்ளது.

டாடா குழுமத்தை சேர்ந்த டாடா ஸ்டீல் நிறுவனம் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் லாபமாக ரூ.1,635.40 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 59.6 சதவீதம் குறைவாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் நிகர லாபமாக ரூ.4,043.5 கோடி ஈட்டியிருந்தது.

வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சு…. டாடா ஸ்டீல்
டாடா ஸ்டீல்

2020 செப்டம்பர் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.37,154 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.34,579 கோடி ஈட்டியிருந்தது.

வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சு…. டாடா ஸ்டீல்
ஸ்டீல்

டாடா ஸ்டீல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த காலாண்டில் இந்தியாவில் விற்பனை (அளவு அடிப்படையில்) நடைபெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் முகூர்த்த வணிகம் முடிந்தபிறகு டாடா ஸ்டீல் நிறுவன பங்கின் விலை 1.15 சதவீதம் உயர்ந்து ரூ.492.10ஆக உயர்ந்துள்ளது.