டாடா ஸ்டீல் லாபம் ரூ.3,989 கோடி… கணித்ததை காட்டிலும் சிறப்பு…

 

டாடா ஸ்டீல் லாபம் ரூ.3,989 கோடி… கணித்ததை காட்டிலும் சிறப்பு…

டாடா ஸ்டீல் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,989 கோடி ஈட்டியுள்ளது.

டாடா குழுமத்தை சேர்ந்த டாடா ஸ்டீல் நிறுவனம் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,989 கோடி ஈட்டியுள்ளது. இது நிபுணர்களின் மதிப்பீட்டை காட்டிலும் அதிகமாகும். மேலும் 2019 டிசம்பர் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு ரூ.1,166 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

டாடா ஸ்டீல் லாபம் ரூ.3,989 கோடி… கணித்ததை காட்டிலும் சிறப்பு…
டாடா ஸ்டீல்

2020 டிசம்பர் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான ஒட்டு மொத்த வருவாய் ரூ.39,594 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாயை காட்டிலும் 11.5 சதவீதம் அதிகமாகும். டாடா ஸ்டீல் நிறுவனம் கடந்த 2020 டிசம்பர் காலாண்டில் மூலதன செலவினமாக ரூ.1,394 கோடி மேற்கொண்டது.

டாடா ஸ்டீல் லாபம் ரூ.3,989 கோடி… கணித்ததை காட்டிலும் சிறப்பு…
ஸ்டீல்

டாடா ஸ்டீல் நிறுவனம் இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (2020 ஜனவரி-டிசம்பர்) தனது நிகர கடன் சுமையை ரூ.18,609 கோடி குறைத்துள்ளது. குறிப்பாக கடந்த டிசம்பர் காலாண்டில் மட்டும் நிகர கடன் சுமையில் ரூ.10,325 கோடி குறைத்துள்ளது.