ஆனைக்கும் கூட அடி சறுக்கும்… டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 3 மாதத்தில் ரூ.9,864 கோடி நஷ்டம்

ஆனைக்கும் கூட அடி சறுக்கும்… டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 3 மாதத்தில் ரூ.9,864 கோடி நஷ்டம்

கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட லாக்டவுனால் நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் ஒட்டு மொத்த அளவில் ரூ.9,863.73 கோடியை நிகர இழப்பாக (நஷ்டம்) சந்தித்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,108.66 கோடி ஈட்டியிருந்தது.

ஆனைக்கும் கூட அடி சறுக்கும்… டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 3 மாதத்தில் ரூ.9,864 கோடி நஷ்டம்

2020 மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.62,492.96 கோடியாக குறைந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.86,422.33 கோடியாக இருந்தது. டாடா மோட்டார்ஸின் இங்கிலாந்து நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் ரூ.4,822 கோடி நஷ்ட கணக்கை காட்டியுள்ளது.

ஆனைக்கும் கூட அடி சறுக்கும்… டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 3 மாதத்தில் ரூ.9,864 கோடி நஷ்டம்

2019-20 முழு நிதியாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.11,975.23 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதே நிதியாண்டில் அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.3.01 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.61 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. பொருளாதார மந்தநிலை, பணப்புழக்க அழுத்தம், பி.எஸ்.-6 மாற்றம் காரணமாக கையிருப்பில் திருத்தங்கள் போன்றவற்றால் வாகன தேவை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. லாக்டவுனால் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.