2020 டிசம்பர் காலாண்டு… லாபமாக ரூ.2,906.45 கோடி அள்ளிய டாடா மோட்டார்ஸ்..

 

2020 டிசம்பர் காலாண்டு…  லாபமாக ரூ.2,906.45 கோடி அள்ளிய டாடா மோட்டார்ஸ்..

டாடா மோட்டார்ஸ் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,906.45 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,906.45 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 67 சதவீதம் அதிகமாகும். 2019 டிசம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் லாபமாக ரூ.1,738.3 கோடி ஈட்டியிருந்தது.

2020 டிசம்பர் காலாண்டு…  லாபமாக ரூ.2,906.45 கோடி அள்ளிய டாடா மோட்டார்ஸ்..
டாடா மோட்டார்ஸ்

2020 டிசம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான ஒட்டு மொத்த வருவாய் ரூ.75,653.8 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 5.5 சதவீதம் அதிகமாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் லாபமாக 43.90 கோடி பவுண்டு ஈட்டிள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 263 சதவீதம் அதிகமாகும்.

2020 டிசம்பர் காலாண்டு…  லாபமாக ரூ.2,906.45 கோடி அள்ளிய டாடா மோட்டார்ஸ்..
டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் ரூ.638.04 கோடியை இழப்பாக சந்தித்துள்ளது. இருப்பினும் இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் மிகவும் குறைவாகும். அந்த காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனிப்பட்ட முறையில் ரூ.1,039.51 கோடியை இழப்பாக சந்தித்து இருந்தது.