என்னதான் ஆச்சு… தொடர் நஷ்டத்தில் டாடா மோட்டார்ஸ்..

 

என்னதான் ஆச்சு… தொடர் நஷ்டத்தில் டாடா மோட்டார்ஸ்..

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.8,443.98 கோடியை இழப்பாக சந்தித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.3,679.66 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. 2020 மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ.9,863.75 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது.

என்னதான் ஆச்சு… தொடர் நஷ்டத்தில் டாடா மோட்டார்ஸ்..

கடந்த காலாண்டில் பல நாடுகளில் லாக்டவுன் அமலில் இருந்ததால் ஜே.எல்.ஆர். வாகனங்கள் விற்பனை மோசமாக இருந்தது அதோடு உள்நாட்டிலும் வாகன விற்பனை படுமந்தமாக இருந்ததே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இழப்புக்கு காரணம் என தகவல். 2020 ஜூன் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.31,983.1 கோடியாக சரிவடைந்துள்ளது.

என்னதான் ஆச்சு… தொடர் நஷ்டத்தில் டாடா மோட்டார்ஸ்..

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வருவது மற்றும் பல நாடுகளில் தொடர்ந்து லாக்டவுன் நடைமுறைப்படுத்துவதாலும் இந்த ஆண்டு நிச்சயமற்றதாக இருக்கும் என டாடா மோட்டார்ஸ் தனது கண்ணோட்டத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 38 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.