கொரோனா காலத்திலும் ஜொலித்த டாடா மோட்டார்ஸ்…. விற்பனையில் கோட்டை விட்ட ராயல் என்பீல்டு..

கொரோனா காலத்திலும் ஜொலித்த டாடா மோட்டார்ஸ்…. விற்பனையில் கோட்டை விட்ட ராயல் என்பீல்டு..

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் விற்பனை அதிகரித்துள்ளது. அதேசமயம் அந்த மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை குறைந்துள்ளது.

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை குறித்த புள்ளிவிவரத்தை கடந்த 1ம் தேதி முதல் வெளியிட்டு வருகின்றன. மாருதி, எஸ்கார்ட்ஸ், ஹூண்டாய் உள்ளிட்ட சில நிறுவனங்களின் விற்பனை சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது வளர்ச்சி கண்டுள்ளன. அதேசமயம் மகிந்திரா, பஜாஜ் உள்பட பல நிறுவனங்களின் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது.

கொரோனா காலத்திலும் ஜொலித்த டாடா மோட்டார்ஸ்…. விற்பனையில் கோட்டை விட்ட ராயல் என்பீல்டு..
டாடா மோட்டார்ஸ் கார்கள்

நம் நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 36,472 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 13 சதவீதம் அதிகமாகும். 2019 ஆகஸ்ட் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 32,166 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.

கொரோனா காலத்திலும் ஜொலித்த டாடா மோட்டார்ஸ்…. விற்பனையில் கோட்டை விட்ட ராயல் என்பீல்டு..
ராயல் என்பீல்டு

எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் நிறுவனமான ராயல் என்பீல்டு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 50,144 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2019 ஆகஸ்ட் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 52,904 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து இருந்தது. ஆக, கடந்த மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வாகன விற்பனை 5 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.