”40 லட்சம் பயணிகள் ரக வாகனங்கள் உற்பத்தி” – டாடா மோட்டார்ஸ் புது சாதனை

”40 லட்சம் பயணிகள் ரக வாகனங்கள் உற்பத்தி” – டாடா மோட்டார்ஸ் புது சாதனை

இந்தியாவில் 40 லட்சம் பயணிகள் ரக வாகனங்களை தயாரித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சாதனையை படைத்திருக்கிறது.

”40 லட்சம் பயணிகள் ரக வாகனங்கள் உற்பத்தி” – டாடா மோட்டார்ஸ் புது சாதனை

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பயணிகள் ரக வாகனங்கள் மட்டுமின்றி அனைத்து வகை வாகனங்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. குறிப்பாக டாடா மோட்டார்ஸின் இண்டிகா, சியர்ரா, சுமோ, சஃபாரி, மற்றும் நானோ உள்ளிட்ட பல கார்கள் சந்தையில் மிக பிரபலமாக விளங்கி வருகின்றன. இந்நிலையில் பயணிகள் ரக வாகனங்கள் உற்பத்தியில் 40 லட்சம் என்ற புதிய மைல்கல்லை அடைந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சாதனையை படைத்திருக்கிறது.

”40 லட்சம் பயணிகள் ரக வாகனங்கள் உற்பத்தி” – டாடா மோட்டார்ஸ் புது சாதனை

இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பயணிகள் ரக வாகனங்கள் உற்பத்தியில் 40 லட்சம் இந்த மைல்கல்லை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005-06ம் ஆண்டில் முதன்முதலாக 10 லட்சம் என்ற மைல்கல்லை அடைந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பின்னர் 2015ம் ஆண்டில் 30 லட்சம் என்ற மைல்கல்லை அடைந்தது. இந்நிலையில் தற்போது 40 லட்சம் என்ற மைல்கல்லை அடைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”40 லட்சம் பயணிகள் ரக வாகனங்கள் உற்பத்தி” – டாடா மோட்டார்ஸ் புது சாதனை

மின்சார வாகனங்கள் உற்பத்தியிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனமே முன்னிலை வகிக்கிறது. மின்சார வாகனங்களுக்கான சந்தையில் 67 சதவீத சந்தை பங்கை கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்