வருவாய் 2 மடங்கு அதிகரித்தபோதிலும், ரூ.4,450.92 கோடி நஷ்டத்தை சந்தித்த டாடா மோட்டார்ஸ்..

வருவாய் 2 மடங்கு அதிகரித்தபோதிலும், ரூ.4,450.92 கோடி நஷ்டத்தை சந்தித்த டாடா மோட்டார்ஸ்..

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.4,450.92 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பயணிகள் வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் மற்றும் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.4,450.92 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.. 2020 ஜூன் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ.8,437.99 கோடி இழப்பு ஏற்பட்டது.

வருவாய் 2 மடங்கு அதிகரித்தபோதிலும், ரூ.4,450.92 கோடி நஷ்டத்தை சந்தித்த டாடா மோட்டார்ஸ்..
டாடா மோட்டார்ஸ்

2021 ஜூன் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.66,406.45 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 ஜூன் காலாண்டைக் காட்டிலும் இரு மடங்குக்கு மேல் அதிகமாகும். அந்த காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.31,983.06 கோடி ஈட்டியிருந்தது.

வருவாய் 2 மடங்கு அதிகரித்தபோதிலும், ரூ.4,450.92 கோடி நஷ்டத்தை சந்தித்த டாடா மோட்டார்ஸ்..
டாடா மோட்டார்ஸ்

கடந்த ஜூன் காலாண்டில் ஜே.எல்.ஆரின் சில்லரை விற்பனை 1.24 லட்சம் வாகனங்களாக உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 68.1 அதிகமாகும். மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்ததக தினத்தை காட்டிலும் 2.35 சதவீதம் குறைந்து ரூ.284.45ஆக இருந்தது.