”பிக்பாஸ்கட் நிறுவன பங்குகளை வாங்க டாடா குழுமம் பேச்சுவார்த்தை ?”

 

”பிக்பாஸ்கட் நிறுவன பங்குகளை வாங்க டாடா குழுமம் பேச்சுவார்த்தை ?”

பல சரக்கு பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள பிக்பாஸ்கட் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்குவது தொடர்பாக டாடா குழுமம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

”பிக்பாஸ்கட் நிறுவன பங்குகளை வாங்க டாடா குழுமம் பேச்சுவார்த்தை ?”

இந்த தகவலின் படி, பிக்பாஸ்கட் நிறுவனத்தில் 20 சதவீத பங்குகளை கைப்பற்றுவது தொடர்பாக டாடா குழுமம் அந்நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அக்டோபர் இறுதிக்குள் உடன்பாடு எட்டப்பட்டு அது குறித்த முறையான அறிவிப்பு வெளியாக கூடும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்லுக்கு போட்டி அளிக்கும் வகையில் டாடா குழுமம் களத்தில் இறங்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

”பிக்பாஸ்கட் நிறுவன பங்குகளை வாங்க டாடா குழுமம் பேச்சுவார்த்தை ?”

நாடு முழுவதும் கிளைகளை கொண்டுள்ள பிக்பாஸ்கட் நிறுவனம், டாடா குழுமம் மட்டுமின்றி பல புதிய முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதன் மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • எஸ். முத்துக்குமார்