டாடா எல்க்சி நிகர லாபம் ரூ.113 கோடி.. வருவாய் 39 சதவீதம் உயர்வு..

 

டாடா எல்க்சி நிகர லாபம் ரூ.113 கோடி.. வருவாய் 39 சதவீதம் உயர்வு..

டாடா எல்க்சி நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.113.4 கோடி ஈட்டியுள்ளது.

டாடா குழுமத்தை சேர்ந்த டாடா எல்க்சி நிறுவனம் டிசைன் மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. டாடா எல்க்சி நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.113.4 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 64.6 சதவீதம் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் டாடா எல்க்சி நிகர லாபமாக ரூ.68.9 கோடி ஈட்டியுள்ளது.

டாடா எல்க்சி நிகர லாபம் ரூ.113 கோடி.. வருவாய் 39 சதவீதம் உயர்வு..
டாடா எல்க்சி

2021 ஜூன் காலாண்டில் டாடா எல்க்சி நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.558.30 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 39.4 சதவீதம் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் டாடா எல்க்சி நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.400.5 கோடி ஈட்டியிருந்தது. டாடா எல்க்சி நிறுவனத்தின் வர்த்தகம் அமெரிக்காவில் 69.3 சதவீதமும், ஐரோப்பாவில் 30.1 சதவீதமும், இந்தியாவில் 47.6 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.

டாடா எல்க்சி நிகர லாபம் ரூ.113 கோடி.. வருவாய் 39 சதவீதம் உயர்வு..
டாடா எல்க்சி

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, டாடா எல்க்சி நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.12 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.4,302.55ஆக இருந்தது.