டி.சி.எஸ். லாபம் ரூ.9,246 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.15 டிவிடெண்டு அறிவிப்பு

 

டி.சி.எஸ். லாபம் ரூ.9,246 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.15 டிவிடெண்டு அறிவிப்பு

2021 மார்ச் காலாண்டில் டி.சி.எஸ். நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.9,246 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் டி.சி.எஸ். நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.9,246 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 14.9 சதவீதம் அதிகமாகும்.

டி.சி.எஸ். லாபம் ரூ.9,246 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.15 டிவிடெண்டு அறிவிப்பு
டி.சி.எஸ்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ. 43,705 கோடி ஈட்டியுள்ளது. 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 9.4 சதவீதம் அதிகமாகும். டி.சி.எஸ். நிறுவனம் பங்குதாரர்களுக்கு இறுதி டிவிடெண்ட் அறிவித்துள்ளது.

டி.சி.எஸ். லாபம் ரூ.9,246 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.15 டிவிடெண்டு அறிவிப்பு
டி.சி.எஸ்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்டாக ரூ.15 வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று டி.சி.எஸ். நிறுவன பங்கின் விலை 2.43 சதவீதம் குறைந்து ரூ.3,241.45ஆக சரிவடைந்தது.