டாஸ்மாக் பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டம்.. என்ன காரணம்?

 

டாஸ்மாக் பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டம்.. என்ன காரணம்?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால், கொரோனாவை தடுக்கும் பொருட்டு மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடினர். ஆனால் கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக டாஸ்மாக்கை மீண்டும் திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் படி சென்னையை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் திறக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டாஸ்மாக் திறக்கப்பட்டது.

டாஸ்மாக் பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டம்.. என்ன காரணம்?

இதனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைக்கு முன் தினமும், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பணமழை கொட்டுகிறது. கடந்த சனிக்கிழமை மட்டுமே ரூ.250 கோடிக்கு மேல் டாஸ்மாக்குகளில் மதுவிற்பனை ஆனது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டாஸ்மாக் வேலை நேரத்தை குறைக்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.