தமிழகத்தில் டாஸ்மாக் மதுவிற்பனை குறைந்தது: நேற்றைய வருவாய் எவ்வளவு தெரியுமா?

 

தமிழகத்தில் டாஸ்மாக் மதுவிற்பனை குறைந்தது: நேற்றைய வருவாய் எவ்வளவு தெரியுமா?

கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் திறக்கப்பட்ட போது, உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படாததால் 8 ஆம் தேதி டாஸ்மாக்கை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 45 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் இரண்டே நாட்களில் மூடப்பட்டது குடிமகன்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் திறப்பது தொடர்பாக மேல்முறையீடு செய்த நிலையில், டாஸ்மாக்குக்கு எதிரான தடை நீக்கப்பட்டது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுவிற்பனை குறைந்தது: நேற்றைய வருவாய் எவ்வளவு தெரியுமா?

இதனையடுத்து கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில்  டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.  அதன்படி கடந்த 17 ஆம் தேதி தமிழகத்தில் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 18 ஆம் தேதி 133.1 கோடிக்கும், நேற்று  109.3 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று, டாஸ்மாக் கடைகளில் ரூ.91.5 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சென்னை மண்டலம் ரூ. 6 .2  கோடியும், திருச்சி மண்டலம் ரூ.23 .2 கோடியும், சேலம் மண்டலம்  24 .3 கோடியும் மற்றும் கோவை மண்டலம்  19.4  கோடியும் வருவாய் வந்துள்ளது. அதேபோல்  மதுரை மண்டலம்  22 .1 கோடி வசூலை அள்ளியுள்ளது.