கேரளாவில் நாளை திறக்கபடும் டாஸ்மாக்! ஒருமுறை மதுவாங்கினால் 5 நாட்களுக்கு பின்னே மீண்டும் அனுமதி

 

கேரளாவில் நாளை திறக்கபடும் டாஸ்மாக்! ஒருமுறை மதுவாங்கினால் 5 நாட்களுக்கு பின்னே மீண்டும் அனுமதி

கேரளாவில் ஓழிப்பு பொது ஊரடங்கால் மூடப்பட்ட மதுபான விற்பனை நிலையங்கள் 67 நாட்களுக்கு பின், நாளை (28.05.20) மீண்டும் திறக்கப்படுகிறது.

கேரள மாநிலத்தில் 612 மதுபான பார்கள், 360 பீர் பார்லர்கள், அரசின் பீவரேஜ் கார்ப்பரேஷன் மூலம் இயங்கும் 301 நிலையங்களில் காலை 9 மணி முதல் மதுபான விற்பனை தொடங்கவுள்ளது. “வெர்ச்சுவல் க்யூ மேனேஜ்மெண்ட் சிஸ்டம் (VQM)” என்ற செயலியில் பதிவு செய்து ”இ- டோக்கன்” பெற்றவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 முதல் இரவு 10 மணி வரை பதிவு. காலை 9 முதல் மாலை 5 மணி வரை மது விற்பனை செய்யப்படும். ஒருவருக்கு 3 லிட்டர் மதுபானம் வழங்கப்படும். ஒருமுறை மதுபானம் வாங்கினால் ஐந்து நாட்களுக்கு பின்பே மறுபதிவு செய்யமுடியும்.

கேரளாவில் நாளை திறக்கபடும் டாஸ்மாக்! ஒருமுறை மதுவாங்கினால் 5 நாட்களுக்கு பின்னே மீண்டும் அனுமதி

மதுபான விற்பனை நிலையங்களில் ஒருவருக்கும் மற்றவருக்கும் ஆறு அடி இடைவெளியும் காத்திருப்பு வரிசையில் ஐந்து பேர் மட்டுமே நிற்க அனுமதி, அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் என கேரள சுங்கத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் போது சட்டம் ஒழுங்கு பிரச்னை நேராமல் இருக்க போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.