• February
    24
    Monday

Main Area

Main



காந்தி நினைவு தினம்... நாளை டாஸ்மாக் விடுமுறை

madurai
madurai

மதுரை: மகாத்மா காந்தியின் நினைவுதினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் நினைவுதினம் ஜனவரி 30-ம் தேதி நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து காந்தி ஜெயந்திக்கு மதுபானக்கடைகளை மூடி வந்த சூழலில் காந்தியின் நினைவு தினத்திற்கும் மதுபானக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என கன்னியாகுமரியை சேர்ந்த ரதீஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருக்கும் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.