குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி… 2 நாளைக்கு மது கிடைக்காது!

 

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி… 2 நாளைக்கு மது கிடைக்காது!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கும் சூழலில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மால்கள், தியேட்டர்கள், கோவில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில், அரசின் உத்தரவின் பேரில் டாஸ்மாக் பார்கள் மற்றும் தனியார் பார்களும் மூடப்பட்டன.

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி… 2 நாளைக்கு மது கிடைக்காது!

பார்கள் மூடப்பட்டது குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டாஸ்மாக் கடைகளையும் மூடக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு மூடப்பட்டதைப் போல, இந்த ஆண்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதற்கான செய்தி விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், குடிமகன்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. மே 1,2ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்பது தான் அந்த செய்தி. மே 1ம் தேதி தொழிலாளர் தினம் என்பதாலும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாலும் அந்த 2 நாட்களுக்கும் டாஸ்மாக்குகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்கூட்டியே மது வாங்கி வைத்துக் கொள்ள குடிமகன்கள் தயாராகி வருகிறார்கள்.