கொரோனா பரவலைத் தடுக்க டாஸ்மாக் கடைகளை ஐந்து மணிக்கு மூட வேண்டும்! – ஊழியர்கள் கோரிக்கை

 

கொரோனா பரவலைத் தடுக்க டாஸ்மாக் கடைகளை ஐந்து மணிக்கு மூட வேண்டும்! – ஊழியர்கள் கோரிக்கை

டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க டாஸ்மாக் கடைகளை ஐந்து மணிக்கு மூட வேண்டும்! – ஊழியர்கள் கோரிக்கை
தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். மேலும் சில ஊழியர்களும் உயிரிழந்தனர். பலருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கொரோனா பரவலைத் தடுக்க டாஸ்மாக் கடைகளை ஐந்து மணிக்கு மூட வேண்டும்! – ஊழியர்கள் கோரிக்கைஇந்த நிலையில் நாமக்கல் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி டாஸ்மாக் பணியாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.முருகன் கூறுகையில், “கொரோனா காலத்தில் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்களால் தொற்று பரவுகிறது. தொற்று காரணமாக உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.

கொரோனா பரவலைத் தடுக்க டாஸ்மாக் கடைகளை ஐந்து மணிக்கு மூட வேண்டும்! – ஊழியர்கள் கோரிக்கை
கொரோனா காலத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கூடுதல் சிறப்பு ஊதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். முழு ஊரடங்கின் போது விதிக்கப்பட்ட 50 சதவிகித அபாரதத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.
டாஸ்மாக் கடைகள் தற்போது இரவு எட்டு மணி வரை திறந்திருக்கின்றன. இதை ஐந்து மணி நேரமாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். வருகிற 3ம் தேதி வரை கருப்பு பேட்ச் அணிந்து பணியில் பங்கேற்கும் போராட்டம் நடக்கும்” என்றார்.