சூழலுக்கேற்ப டாஸ்மாக் கடைகளை மூடலாம் : தமிழக அரசு

 

சூழலுக்கேற்ப டாஸ்மாக் கடைகளை மூடலாம் :  தமிழக அரசு

நிவர் புயல் காரணமாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தந்த மாவட்டங்களில் சூழலுக்கு ஏற்ப டாஸ்மாக் கடைகளை மூடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சூழலுக்கேற்ப டாஸ்மாக் கடைகளை மூடலாம் :  தமிழக அரசு

வங்கக்கடலில் கடந்த 21ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக உருமாறியுள்ளது. இந்த புயலானது புதுச்சேரி – மகாபலிபுரம் இடையே இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காற்றின் வேகம் 100 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூழலுக்கேற்ப டாஸ்மாக் கடைகளை மூடலாம் :  தமிழக அரசு

இதன் காரணமாக சென்னை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சூழலுக்கேற்ப டாஸ்மாக் கடைகளை மூடலாம் :  தமிழக அரசு

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகாத சூழலில், மாவட்டங்களில் சூழலுக்கு ஏற்ப டாஸ்மாக் கடைகளை மூடி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது