• February
    24
    Monday

Main Area

Main



டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸை அள்ளிக்கொடுத்த அரசு!

டாஸ்மாக்
டாஸ்மாக்

டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.16,300, மற்ற ஊழியர்களுக்கு ரூ.16,800 போனஸ் தொகை வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் தொகையை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் அரசுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 

டாஸ்மாக்

பணியாளர்களுக்கு சட்டப்படி போனஸ் வழங்கப்படுவதில் குறைந்த பட்சம் போனஸ் 8.33 சதவீதம் என்றும் கணக்கிட்டும், இதற்கும் கூடுதலாக வழங்கப்படும் தொகை கருணைத் தொகை என்ற பெயரில் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு அறிவித்துள்ள 20% போனஸும்,  11.67% கருணைத்தொகையும் வழங்கப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.16,300, மற்ற ஊழியர்களுக்கு ரூ.16,800 போனஸ் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.