ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி

 

ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்தில் 35 ஆயிரத்தை தாண்டி இருந்த கொரோனா பாதிப்பு ஊரடங்கு காரணமாக 18 ஆயிரத்துக்கும் குறைவாக குறைந்துள்ளது. கடந்த மே 10 ஆம் தேதி முதல் 31தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது . இதை தொடர்ந்து ஜூன் 1 ஆம் முதல் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டித்துள்ள தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை , மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுபாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மாவட்டங்களை தவிர இதர 27 மாவட்டங்களில் ஜூன் 14 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட தமிழ் நாடு அரசு அனுமதி