“டாஸ்மாக்கில் கொட்டிய பணமழை”…நேற்று ஒரே நாளில் ரூ.250 கோடிக்கு மேல் மது விற்பனை!

 

“டாஸ்மாக்கில் கொட்டிய பணமழை”…நேற்று ஒரே நாளில் ரூ.250 கோடிக்கு மேல் மது விற்பனை!

தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று முழு ஊரடங்கை ஒட்டி பால் விநியோகம், மருத்துவனை, மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு ஏதும் இயங்காது. அதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை நேற்றே வாங்கிக் வைத்துக் கொண்டனர். குறிப்பாக டாஸ்மாக் கடைகள் இன்று செயல்படாது என்பதால், மதுபிரியர்கள் நேற்றே மதுபாட்டில்களை வாங்கிக் குவித்துள்ளனர். எல்லா வாரமும், முழு பொதுமுடக்கத்தின் முன்தினம் எவ்வளவு டாஸ்மாக் மது விற்பனை குறித்த நிலவரத்தை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.

“டாஸ்மாக்கில் கொட்டிய பணமழை”…நேற்று ஒரே நாளில் ரூ.250 கோடிக்கு மேல் மது விற்பனை!

இந்த நிலையில், இன்று முழுபொதுமுடக்கத்தால் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக்குகளிலும் சேர்த்து ரூ.250.25 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.52.40 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.51.27 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.50.65 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.49.30 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.46.58 கோடிக்கும் மதுவிற்பனை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ரூ. 248 கோடிக்கு மது விற்பனை ஆன நிலையில், இந்த வாரம் சென்னையில் டாஸ்மாக்குகள் திறக்கப்பட்டதால் ரூ.250 கோடிக்கும் மேல் மது விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.