‘பொங்கல் பண்டிகை விடுமுறை’ : டாஸ்மாக்கில் எத்தனை கோடி வருவாய் தெரியுமா?

‘பொங்கல் பண்டிகை விடுமுறை’ : டாஸ்மாக்கில் எத்தனை கோடி வருவாய் தெரியுமா?

பொங்கல் விடுமுறை நாட்களில் டாஸ்மாக்கில் ரூ.589 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

‘பொங்கல் பண்டிகை விடுமுறை’ : டாஸ்மாக்கில் எத்தனை கோடி வருவாய் தெரியுமா?

தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, கடந்த 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என கிராமங்களில் பொங்கல் கொண்டாட்டம் களைக் கட்டியது. பொங்கல் விடுமுறை 3 நாட்களோடு சேர்த்து, இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறையும் கிடைத்ததால் வேலைக்கு செல்வோர் மகிழ்ச்சியில் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்தனர். அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

‘பொங்கல் பண்டிகை விடுமுறை’ : டாஸ்மாக்கில் எத்தனை கோடி வருவாய் தெரியுமா?

இதனிடையே, பொங்கல் பண்டிகை நாட்களில் டாஸ்மாக்கில் மது விற்பனை கல்லாக்காட்டியது. பொதுவாக அரசு விடுமுறைகளில் மது விற்பனை அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்று தான் என்றாலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக டாஸ்மாக்குக்கு வருவாய் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பொங்கல் விடுமுறை தினங்களில் மட்டும் மொத்தம் ரூ.589 கோடிக்கு மது விற்பனையாகி இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜன.13ம் தேதி ரூ.147.75 கோடிக்கும், 14ம் தேதி ரூ.269.43 கோடிக்கும், 16ம் தேதி ரூ.172 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.