“கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குகின்றன”

 

“கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குகின்றன”

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

“கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குகின்றன”

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த காசிமாயன் என்பவர் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக வரவு, செலவு கணக்குகளை கேட்டிருந்தார். அதற்கு தமிழ்நாடு மாநில வாணிபகழகம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.

2010-11ல் ரூ.3.56 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் 2011-12 ல் 1.12 கோடி ரூபாய் 2012-13 ல் 103.64 கோடி ரூபாய்2013-14 ல் 64.44 கோடி ரூபாய் 2019-20ல் 71.93 கோடி ரூபாய் இழப்பு என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2004 முதல் 2020 வரை மொத்த மது கொள்முதல் 1,70,240 கோடி ரூபாய் என்றும், மது விற்பனை 2,83,361 கோடி ரூபாய் என்றும் தெரிவித்த வாணிப கழகம், செலவு மட்டும் 2,87,062 கோடி ரூபாய் என்று அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் டாஸ்மாக் மொத்த லாபம் 300 கோடி ரூபாய் மட்டுமே என்றும் விளக்கமளித்துள்ளது.