2 நாட்களில் டாஸ்மாக் வருமானம் ரூ.466 கோடி! முதலிடத்தில் உள்ள மண்டலம் எது தெரியுமா?

2 நாட்களில் டாஸ்மாக் வருமானம் ரூ.466 கோடி!  முதலிடத்தில் உள்ள மண்டலம் எது தெரியுமா?

தமிழகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு ரூ.466 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2 நாட்களில் டாஸ்மாக் வருமானம் ரூ.466 கோடி!  முதலிடத்தில் உள்ள மண்டலம் எது தெரியுமா?

தமிழகத்தில் கடந்த 6 மாத காலமாக மூடப்பட்டு கிடந்த டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. குறிப்பாக பண்டிகை தினங்களில் மது விற்பனை கணிசமாக உயரும். அந்த வகையில் தீபாவளியையொட்டி டாஸ்மாக் வருமானம் களைகட்டும் என்பதால் பார்கள் திறக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இருப்பினும் பார்களை திறக்க அரசு அனுமதியளிக்கவில்லை.

2 நாட்களில் டாஸ்மாக் வருமானம் ரூ.466 கோடி!  முதலிடத்தில் உள்ள மண்டலம் எது தெரியுமா?

இந்நிலையில் தமிழகத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் 2 நாட்களில் ரூ.466கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் நவ 13 ஆம் தேதி ரூ.227.88 கோடியும், நவ 14 ஆம் தேதி ரூ. 237.91 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 2 நாட்களில் ரூ.104 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.94 கோடிக்கு மது விற்பனையாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வருவாயானது கடந்த ஆண்டை விட அதிகம் என்று கூறப்படுகிறது.