• December
    15
    Sunday

Main Area

Main



வாக்கு எண்ணிக்கையால் தவிக்கும் மதுபான பிரியர்கள்... 

tasmac
tasmac

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு புதுச்சேரியில் இரண்டு நாட்கள் மதுக்கடைகளை மூட அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் காலியாகவுள்ள 22 சட்டமன்றத்தொகுதிகளுக்கும் நாடாளுமனற தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இரண்டு தேர்தலுக்குமான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. 

புதுச்சேரி மாநிலத்தில் மக்களவை தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுதினம் எண்ணப்பட உள்ளன. இதனால் புதுச்சேரி முழுவதும் 23 மற்றும் 24 ஆம் தேதி மாலை 4 மணி வரை அனைத்து மதுக்கடைகளையும் மூடும்படி கலால் துறை துணை ஆணையர் தயாளன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல் உடுமலைப்பேட்டை பகுதிகளிலும் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பார்களில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.