3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்: அதிர்ச்சியில் மதுபிரியர்கள்!

 

3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்: அதிர்ச்சியில் மதுபிரியர்கள்!

வங்கக்கடலில் கடந்த 21ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிர புயலாக மாறி, சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் அதிகாலை அல்லது நள்ளிரவு கரையை கடக்கவிருக்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டு, பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்: அதிர்ச்சியில் மதுபிரியர்கள்!

அந்த வகையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக்குகளை மூடுவது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் சூழலுக்கு ஏற்ப மூடிக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது மதுபிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.